Type Here to Get Search Results !

(12/5/2026) தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் பகுதியில் இன்று சுற்றுலாத் துறையின் சார்பில் அருவி பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் அருவி பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் பழைய குற்றால அருவி பகுதியில் மழையினால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைப்பது குறித்தும், பெண்களுக்கான உடை மாற்றும் அறை சீரமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர்., இ.ஆ.ப.அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வில், மாவட்ட வன அலுவலர் முனைவர்.ராஜ்மோகன், இ.வ.ப., அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.தண்டபாணி, வன அலுவலர் திரு.செல்லத்துரை, சுற்றுலா அலுவலர் திருமதி ந.நித்திய கல்யாணி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உதவி பொறியாளர் விஜில் ஆகியோர் உடனிருந்தனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.