(12/6/2026) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில், உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. D CholaRajan
(11/6/2026) சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். D CholaRajan
(11/6/2026) மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில், நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்துப் பேசினார். D CholaRajan
(11/6/2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இஆப., அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலைப் பயிர்களில் இயற்கை வேளாண்மை குறித்து மாவட்ட அளவிலான கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். D CholaRajan
(10/6/2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். D CholaRajan
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். D CholaRajan
(6/6/2026) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், அரசலாறு நீர்வழிதடத்திலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் முழலை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். D CholaRajan