(18/3/2026) திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முகப்பில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.