(3/3/2026) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், ஆணையர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள், துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர் திரு.பாலு, நகரப் பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் திரு.மதிவாணன், திருமதி.துர்காதேவி, திருமதி.விஜயலட்சுமி கண்ணன், திருமதி.பி.ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.