(3/3/2026) நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைக்குளம் கீழ்கரைப் பகுதியைச் சார்ந்த எஸ்.கீர்த்தனா என்ற பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் தேர்ச்சிப்பெற்று பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக பணிவாய்ப்பை பெற்றுள்ளதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப அவர்களிடம் பணியாணையினைக் காண்பித்து வாழ்த்துப்பெற்றார்.