(1/3/2026) திருப்பூர், அவிநாசி அருகே அமுதம் கார்டன் பகுதியில் உள்ள குட்டையில் 2 சிறுவர்களில் உடல்கள் மிதப்பதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற அவர்கள், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் தரணிஷ், ஹரிஹரன் ஆகியோர் என்பதும், விடுமுறை நாளில் குளிக்கச் சென்ற இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.