Type Here to Get Search Results !

(18.2.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நீதிக்கட்சி வரலாறு, தந்தை பெரியார் சிந்தனைத் தொகுப்பு, அறிஞர் அண்ணா சிந்தனைத் தொகுப்பு, திராவிட இயக்க பெண் சிந்தனையாளர்கள் தொகுப்பு, திராவிட இயக்கமும் சமூக பண்பாட்டு பொருளாதார மாற்றங்களும், திராவிட இயக்கச் சிறுகதைகள்-2 தொகுப்புகள் ஆகிய திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் திரு.ஐ.லியோனி, பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன் இ.ஆ.ப., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மரு.மா.ஆர்த்தி இ.ஆ.ப., திராவிடக் களஞ்சியத்தின் பொது பதிப்பாசிரியர் திரு.மூ.அப்பணசாமி மற்றும் நூல்களின் பதிப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.