(15/2/2026) தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “கோவளம், முல்லைக்காடு பகுதிகளில் பல தலைமுறைகளாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழில், அப்பகுதி மக்களின் ஒரே வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு கப்பல் கட்டும் திட்டம் நடைமுறைக்கு வந்தால், உப்பளங்கள் அழிக்கப்பட்டு, தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.