(15/2/2026)திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழா மற்றும் முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இன்று (பிப்.15) விடுமுறை மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படுகிறது. அதிகாலை முதலே கோயிலில் குவிந்த பக்தர்கள், கடல் மற்றும் நாழிக் கிணற்றில் புனித நீராடி சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.