சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் இன்று (பிப்.14/2/2026)) மாலை திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை தடைபட்டது. இதனால், வேலை முடித்து வீடு திரும்புவோர் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கிண்டி அருகே அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி சீரமைக்கப்பட்டதை அடுத்து, சுமார் 40 நிமிடத்திற்கு பின்னர் ரயில் சேவை தொடங்கியது.