Type Here to Get Search Results !

(13.2.2026) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், நாமக்கல் மாவட்டம், நவணி தோட்டக்கூர்பட்டி கிராமத்தில் 2 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களுக்கு மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கம், அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் கிராமத்தில் 3 கோடி ரூபாய் செலவில் இந்தித் திணிப்பினை எதிர்த்துப் போராடி முதன் முதலில் உயிர்த் தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்களுக்கு அரங்கம், ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள குதிரையின் மேல் அமர்ந்தபடி உள்ள தீரன் சின்னமலை அவர்களின் வெண்கலச் சிலை, கரூர் மாவட்டம், எல்லைகாட்டு ராமச்சந்திரபுரம் கிராமத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் கரூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.முத்துசாமி அவர்களுக்கு திருவுருவச் சிலை ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.#MKStalin #UdhayStalin #MPSaminathan.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.