Type Here to Get Search Results !
(24/10/2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் திரு.என்.வெங்கடேசன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
(23/10/2026) வட கிழக்கு பருவமழை தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதன்படி,  குன்னூர் வட்டம், அதிகரட்டி 2 கிராமம், பொங்கலட்டி பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தினை பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் வனத்துறையினரால் அகற்றும் பணிகள்   விரைவாக மேற்கொள்ளப்பட்டது.
இன்று (21.10.2026) தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. அசோக் குமார் அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.
(17/10/2026) வட கிழக்கு பருவமழை தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதன்படி, மாவட்ட ஆட்சித் தலைவர்  அவர்களின் அறிவுறுத்தலின் படி, நீலகிரி மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய (பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள) (Vulnerability Area) இடங்களை மாவட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
(13/10/2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இரண்டாம் கட்டம் - பொறுப்பு அலுலவர்களுக்கான பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்.
(13/10/2026) தென்காசி மாவட்டம், இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் 561 பயனாளிகளுக்கு ரூ.475.64 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  மரு.வி.கே.ராஜீவ் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மா.வீராசாமி அவர்கள், தென்காசி சார் ஆட்சியர் திருமதி.வைஷ்ணவி பால், இ.ஆ.ப., அவர்கள், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முனைவர் ஆ.ரா.சிவராமன் அவர்கள், புளியங்குடி நகர்மன்ற தலைவர் திருமதி. விஜயா சௌந்திர பாண்டியன் அவர்கள், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் திரு.தி.உதயகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

(13/10/2026) தென்காசி மாவட்டம், இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் 561 பயனாளிகளுக்கு ரூ.475.64 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மா.வீராசாமி அவர்கள், தென்காசி சார் ஆட்சியர் திருமதி.வைஷ்ணவி பால், இ.ஆ.ப., அவர்கள், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முனைவர் ஆ.ரா.சிவராமன் அவர்கள், புளியங்குடி நகர்மன்ற தலைவர் திருமதி. விஜயா சௌந்திர பாண்டியன் அவர்கள், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் திரு.தி.உதயகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

(12/10/2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆரம்ப நிலையில் கண்டறியும் மருத்துவ பரிசோதனை வாகனத்தை துவக்கி வைத்தார்.
இன்று 12.10.2026 ஆம் தேதி மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் கோவை மாநகர பொறுப்பு காவல் ஆணையர் திருமதி.R.V.ரம்யா பாரதி IPS., அவர்கள் கோவை மாநகர துணை ஆணையர் தெற்கு திரு.G.கார்த்திகேயன் மற்றும் காவலர்களுடன் கோவை மாநகரில் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளான டவுன்ஹால் மற்றும்ஒப்பணக்கார வீதி ஆகிய பகுதிகளில் நடை ரோந்து மேற்கொண்டு பொது மக்களுக்குஅறிவுரை வழங்கினார்கள்.
(8/10/2026) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம்  மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில்,   ஆணையர் திருமதி  .நே.பொன்மணி, இ.ஆ.ப.,துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் திருமதி. விஜயலட்சுமி கண்ணன், திருமதி. துர்காதேவி,   திருமதி.பி. ஜெயா நிர்மலா,மாமன்ற  உறுப்பினர்கள் மற்றும் ,  துணை ஆணையர், நகர பொறியாளர்,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள்,  மாநகராட்சி உதவி ஆணையர்கள்,   உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
(8/10/2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 9வது தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற நமது அங்கன்வாடி நமது பொறுப்பு பிரச்சாரம் நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
(7/10/2026) விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவுத்திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்  நடைபெற்றது.
(7/10/2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று போளுா் தொன் போஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியைத் துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
(2/10/2026) நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சி குந்தசப்பை சமுதாய கூட வளாகத்தில், அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு அரசின் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
(1/10/2026) சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
(1/10/2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள்  இன்று  செங்கம் அரசு பொது மருத்துவமனை அருகில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றி சுகாதாரமாக வைக்கும்படியும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் பொதுப்பணி துறையினரிடமும், மருத்துவர்களிடமும் அறிவுறுத்தினார்.
(1/10/2026) நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தும்மனட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.