(16/5/2026) கும்பகோணம் அசூர் பைபாஸ் சாலையில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக மாறியுள்ளதால் அடிக்கடி தீப்பற்றி, அதனால் உருவாகும் கடும் புகைமூட்டம் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வை பெரிதும் பாதித்து வந்தது. இந்நிலையில், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு குப்பை மேடையை அகற்றி நிரந்தர தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன்.தங்கள்,வினோத் ரவி MLA.,கும்பகோணம் சட்டமன்ற தொகுதி,மாவட்ட கழக செயலாளர்,தஞ்சை கிழக்கு மாவட்டம்.