(14/5/2026) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் “தாய் சேய் நலம் குறித்த ஆய்வுக் கூட்டம்” (ம) “கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நலனை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பு ஆலோசனை கூட்டம்” நேற்று நடைபெற்றது. தேசிய நலவாழ்வு இயக்கத்தின் குழந்தைகள் நல நிபுணர் ஆலோசகர் டாக்டர்.ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு குழந்தைகள் நல சேவைகள் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்), மாவட்ட சுகாதார அலுவலர், மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.