(25/2/2026) கோவை ரேஸ்கோர்சில் வழக்கறிஞர்கள் பயிற்சி மைய அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை இ-மெயில் ஒன்று வந்தது. அதில், நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இருந்தது. தகவலறிந்து வந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், நீதிமன்றம் முழுவதும், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். பின்னர் இது புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.