கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12க்குட்பட்ட உடையாம்பாளையம் - சின்னவேடம்பட்டி பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வ மேற்கொண்டார். உடன் மாநகர தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் திரு.இராமமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர்கள் திரு.ஜெயின்ராஜ், திரு.கோபிநாத், சுகாதார ஆய்வாளர் திரு.விஜயகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.