(23/10/2026) வட கிழக்கு பருவமழை தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதன்படி, குன்னூர் வட்டம், அதிகரட்டி 2 கிராமம், பொங்கலட்டி பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தினை பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் வனத்துறையினரால் அகற்றும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டது.