(18/5/2026) இருசக்கர வாகன திருட்டு வழக்கில் ஒருவர் கைதுநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றதாக எதிரி மோகன்ராஜ் (22) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.இச்சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் எதிரி மோகன்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.