(22/2/2026) சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இன்று முதல் திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதற்காக, திமுக எம்பி TR. பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் திருச்சி சிவா, KN. நேரு, ஆ. ராஜா, RS. பாரதி, MRK. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.