(18/2/2026) கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.24க்குட்பட்ட கொடிசியா சாலையில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன கழிப்பிடத்தினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், திறந்து வைத்தார். உடன் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், கிழக்கு மண்டலத்தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் திரு.ராம்குமார், மாமன்ற உறுப்பினர் திரு.பூபதி, உதவி செயற்பொறியாளர் திரு.கல்யாணசுந்தரம், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராஜேந்திரன்,, உதவி பொறியாளர் திரு.ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.