மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எம்.கோவிந்தராஜ் (ஓய்வு) அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (30.10.2025) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக
கூட்டரங்கில் கிரிவலப்பாதையில் மலை மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய்த்துறையினர், வனத்துறையினர், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
