திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (29.10.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோட்டாட்சியர்கள், தேர்தல் வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.