(16.02.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பழம்பெரும் நடிகை திருமதி.எம்.என்.ராஜம் அவர்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினையும், மூத்த திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினையும் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப., திருமதி.எம்.என்.ராஜம் மற்றும் திரு.எஸ்.பி. முத்துராமன் ஆகியோரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.