Type Here to Get Search Results !

(19/8/2026) கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில், இன்று கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களது குறைகளை கேட்டறிந்து நேரடியாக விசாரணை மேற்கொண்டார். மேலும், மூத்த குடிமக்களின் இருக்கைக்கே சென்று அவர்களிடமிருந்து மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, விரைந்து உரிய தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. N. கோடீஸ்வரன் துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.