(11/8/2026) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜேஷ் அவர்களின் தலைமையில் கணக்கம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளிடையே போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.