(11/7/2026) தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை இன்று. தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., அவர்கள் ஆயுதப்படையின் வாராந்திர கவாத்து பயிற்சியில் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். அதனைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மோப்பநாய் படை பிரிவு மற்றும் தஞ்சாவூர் சிறப்பு படை காவலர் தங்கியிருக்கும் வளாகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள். மேலும்ஆயுதப்படையின் அனைத்து அலுவலகங்களையும் ஆய்வு செய்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.