(24/6/2026) திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் மருத்துவர் V.சசிமோகன் இ.கா.ப அவர்கள் தலைமையிலும் திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார், இ.கா.ப அவர்கள் தலைமையிலும் மற்றும் அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.