(21/5/2026) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு கேரளா எல்லை பகுதி புளியரை காவல் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சீ.ஜெயச்சந்திரன் அவர்கள் உள்ளார்.